5 வருடங்களுக்கு ரூ 2.87 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் Jal Jeevan Mission நகர்ப்புற திட்டம் தொடங்கப்படும்
அனைத்து 4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தண்ணீர் விநியோகம், 500 அம்ருத் நகரங்களில் 2.86 கோடி வீடுகளில் குழாய் இணைப்புகள் மற்றும் கழிவு நீர் மேலாண்மை இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.
பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்
சென்னை சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை GDP-ல் 6.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், 2020-21ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 9.5% ஆக இருந்ததாகவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை.
ஜி.எஸ்.டி பற்றி பேசிய நிர்மலா சீதாராமன், இந்த செயல்முறையை மேலும் எளிதாக்க அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றார். "காப்பர் ஸ்கிராப் மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில வாகன பாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்படும்." என்றும் தெஇவித்தார்.
பட்ஜெட் உரை வாசிக்கப் பட்ட நிலையில் மும்பை பங்குச் சந்தை உயர்வு
Budget 2021: பட்ஜெட் உரையில் திருக்குறள் வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து இன்று பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் குறியீடு 1,445 புள்ளிகள் உயர்ந்து 47,730 ஆக வர்த்தகம், நிப்டி குறியீடு 412 புள்ளிகள் உயர்ந்தது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை மதியம் 12.50 மணிக்கு முடித்தார். அவர் பிப்ரவரி 2020 பட்ஜெட் உரையை மக்களவையில் 162 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தார். அப்போது அவர், தனது பட்ஜெட் உரையின் இரண்டு பக்கங்களை மட்டுமே படிக்கவில்லை.
Budget 2021: சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் இந்திய பொருளாதாரம் காக்கப்பட்டது- நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் 2021-22: உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்
பட்ஜெட் 2021-ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை
பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்
கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும்.
புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.
பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.
பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு
நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக