சனி, 22 ஆகஸ்ட், 2020

முதன்முறையாக தங்க நகைகள் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை...

முதன்முறையாக தங்க நகைகள் வாங்கும் முன் எவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு வாடிக்கையாளர் புதியதாக நகை வாங்க வருகிறார் என்றால் அவர்களிடம் நான் கேட்கும் கேள்விகள்.
1. வேலைக்கு செல்பவரா (அ) குடும்ப தலைவியா
2. எந்த ஊரில் வேலை பார்ப்பவர்
3. என்ன மாதிரியான வேலை சூழல்
4. அன்றாடம் அணியவா (அ) விசேஷங்களுக்கு மட்டுமா.

குடும்ப தலைவி என்றால் ...
Modern and Traditional சேர்ந்த கலவையாக விரும்புவார்கள் எடை சிறுது அதிகமாக இருந்தாலும் அழுத்தமான நகையை விரும்புவார்கள்.

வேலைக்கு செல்பவர் என்றால்
வேலை செய்யும் ஊர் மற்றும் வேலை செய்யும் சூழல் பொருத்து Modern or Ultra Modern ஆக அதே சமயம் எடை குறைவாக தேர்வு செய்வார்கள்.

மேற்கூறியவையில் உங்களை நீங்கள் பொருந்தி பார்த்து நகையை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு அடுத்து எந்த மாதிரியான நகையை தேர்வு செய்து எதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
செயின் :
1. மிஷின் செயின்

" முழுவதுமாக இயந்தரத்தில் செய்யபடும் செயின்கள் பார்க்க பார்வையாக எடை குறைவாக காணப்படும் ஆனால் வெகுநாள் உழைக்காது மேலும் சிறிய பழுது ஏற்பட்டாலும் பற்ற வைத்து ஓட்ட வைப்பது சிரமம் ஏனென்றால் மிஷின் செயின் முழுவதும் powder Solder என்ற முறையில் செய்ய படுகிறதால் பலம் ரொம்ப குறைவு.
2. Handmade chain :

" கைகளால் அனுபவம் வாய்ந்த பொற்கொல்லரால் செய்ய படும் செயின்கள் மிக வலுவானவை ஏனென்றால் செயினில் காணப்படும் ஒவ்வொரு வளையமும் தனிதனியாக பற்றவைக்கபடுகிறது.(சுத்தமான 24ctதங்கத்துடன் zinc என்ற உலோகம் சேர்க்கபட்டு உருக்கி பின் அதை கம்பியாக்கி பற்ற வைக்கபடுகிறது) அதன் பின் அனைத்து வளையமும் இணைக்கப்பெற்று ஒரு செயின் உருவாகிறது.
3. Hollow Chain:

"இந்த வகை செயின் பார்க்க மிகவும்
பார்வையாகவும் அதே சமயம் எடை கம்மியாக இருக்கும் அதாவது பார்வைக்கேற்ற எடை இருக்காது. ஏனென்றால் இந்த செயின்கள் கெட்டி(Solid) கம்பியில் செய்யபடுவதில்லை மாறாக ஒரு கனத்த செம்பு கம்பியில் மெலிதான தங்க தகடு சுற்றி டிசைன்க்கு ஏற்றவாறு செய்யபட்டு பின் அதை திராவகத்தில் போட்டு செம்பு மட்டும் பிரித்தெடுக்கப்படும். சிலசமயங்களில் சிறிய அளவில் செம்பு செய்னுள்ளே தங்கிவிட வாய்ப்புள்ளது.

ஆதலால் இந்த வகை Hollow Chain முற்றிலும் தவிர்க்கபட வேண்டியவை இன்று பெரும்பாலான தாய்மார்கள் அணிந்திருக்கும் தாலி செயின் இந்த வகை சேர்ந்ததே அதற்கு காரணம் நம் பெண்கள் பார்வையாக இருக்கும் நகையை மிகவும் விரும்புவார்கள் ஆனால் தாலி செயின் விசயத்தில் மட்டும் அந்த ஆசையை துறந்து கெட்டியான கம்பியில் செய்ய பெற்ற தாம்புகயிறு செயின் போன்றவை வாங்கலாம்.

மேலும் சமீபகாலமாக நடக்கும் செயின்பறிப்பு குற்றங்களில் பறிபோவது இந்த Hollow Rope Chain வகைகள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்ல படுகிறது..

இந்த கட்டுரையில் செயின் பற்றி மட்டுமே கூறியுள்ளேன் இது போல் நெக்லஸ், ஆரம், தோடு போன்று ஒவ்வொரு நகைக்கும் தனிதனியாக குறிப்பிடவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன ஆனால் அவை அனைத்தையும் எழுத பக்கங்கள் போதாது .

நீங்கள் வாங்கும் தங்க நகைகள் ஹால் மார்க் செய்யபட்டவையா என்று சரிபார்த்து பில்போட்டு வாங்கவும் மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக